நாம் ஓர் பயணம், உலகம் ஓர் பாதை
The Day a Species Read Its Own History (PS: In Tamil, but has Transliteration and Translation)
Before we get into the actual thing, here is a small intro: I am working on a project based off using Machine Learning for Phylogenetic tree construction as part of my university’s capstone project, and thought of writing an intro for the same. But my philisophical lens totally deviated it away from the actual idea that I can no longer use this for academic purposes. So, here it is:
Actual version:
விடியலின் மெல்லிய வெளிச்சம் பூமியின் மீது விழும் போது, இந்த உலகத்தின் அதிசயம் தன்னை தானே திறந்து காட்டுகிறது. ஆம், நாம் வாழும் இந்த உலகம் பிரபஞ்சத்தில் சுழலும் ஒரு கல் மற்றும் அல்ல - அதன் படர்ந்து விரிந்த பரப்பளவு பல்வேறு பிராணிகள் பயணம் செல்லும் ஓர் ஒய்வற்ற ஓடை. அதன் அகன்ற ஆகாயமும், ஆர்கலி எழுபும் ஆழ்கடலும், அடர்ந்த ஆரணிகளும், அடங்காத அருவிகளும், ஆயிரக்கணக்கான ஜீவராசிகளின் வசிப்பிடம் மட்டுமல்ல, இவை அனைத்தும் ஒரு அமிதியான அதிசயத்தின் ஆட்டம். நுட்பமான நுண்ணுயிரிகள் முதல் மேகத்தை மிஞ்சும் மிருகங்கள் வரை, சிறகுகள் சூழ்ந்த சிட்டு குருவிகள் முதல் சிறையில்லாத சிங்கங்கள் வரை, பொலிவான பூக்கள் முதல் மல்லல் மரங்கள் வரை, மின்னல் போல் மின்னும் மீன்கள் முதல் வர்ணஜாலமே வியக்கும் வண்ணத்து பூச்சிகள் வரை, ஒவ்வொரு உயிரியின் தனித்துவமான தாளத்தில் துடிக்கும் ஒரு இசை இதில் எதிரொலிக்கிறது.
இந்த பெரும் ஓடலில், ஒரு நாள் மனிதன் விதையாய் முளைத்தான். வந்தான், வென்றான், சென்றான், என சொல்லும் அளவிற்கு, அவன் கைகள் கருவிகளை அமைத்தன, அவன் சிந்தனை சொற்களை செம்மொழியாக செதுக்கியது. நெருப்பின் நாடியை நொடி நீட்டி அமைக்க பார்த்தான், கடலின் ஆழத்தை அளக்க நினைத்தான், மலையின் உயரத்தை தொட முயன்றான், பகலை பிரித்து நேரம் என்று அழைத்தான், கலைகளை கற்று கற்களில் கூட கோட்டைகளை கட்டினான், சூரியனின் சக்தியை சுண்டுவிரலில் சுவைக்க பார்த்தான், மின்னலில் மின்னும் மின்சாரத்தை மெய்ப்பொருளாக மாற்றினான், இதயத்திலே ஒரு இயந்திரத்தாய் இயக்கினான், இதயங்களை இணைக்கும் இணையத்தை கொண்டு வந்தான், வானொலி அலைகளை வீட்டின் வாசலில் கொண்டுவந்தான், அனுவின் சக்தியை அறிவினால் அடக்கினான், நிலவின் மேல் நடிக்க துடித்தான், அவன் சிந்தனையின் சிறகுகளால் சிகரங்களை அடைந்தான். அவன் பார்வை முன்னோக்கி சென்றது, அவன் பாதை பல இடங்களை சேர்ந்தது.
அனால் அண்டத்தின் அமைப்பை அறிவாற்றலுடன் புரிந்து கொண்ட அவன் ஒரு கேள்வியை கேட்க மறந்து விட்டான்: பல உயிர்கள் சங்கமித்த இந்த நெடுஞ்சுற்றில், அவன் இடம் என்ன? இந்த இணைப்பின் இடையில், அவன் உறவு என்ன? மறந்துவிட்டானா, அல்லது மறுத்து விட்டானா? சில சமயங்களில் அந்த கேள்விகளை அவன் கேட்கவில்லை, பல சமயங்களில் கேட்க விரும்பவில்லை.
ஏனெனில் “நான் யார்? எங்கிருந்து வந்தேன்?” என்ற ஆபத்தான கேள்வியின் விடை அவனை உயர்த்தாது, தாழ்த்தி மட்டுமே விடும். தன்னை தானே புத்திசாலியான உயிரி என முடி சூட்டி, நாகரிகம் கொண்ட, இயற்கையை வென்ற அந்த தலைக்கனம் வாடிவிடுமோ என்னமோ? உயர்ந்த உயிரி என பிற உயிரினங்களை வெளியே வைத்து தனக்கு மட்டுமே கட்டிய கோட்டை ஒரேய நொடியில் தரைமட்டம் ஆகிவிடுமோ என்னவோ? அத்துடன் உயிரிகளின் வரிசையில் இறுதியில் வந்து உச்ச நிலையை எட்டியதாக எண்ணி தனக்கென ஒதுக்கிய மகுடமும் அரியாசனமும் மறைந்து விடுமோ என்னமோ? நாமும் பரிணாம வளர்ச்சியின் தொடரில் கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் இணைக்கும் ஒரு மெல்லிய கயிற்றில் நடனமாடும் ஓர் தனித்துவமற்ற உயிரினம் எனும் உண்மையை அவன் மனம் ஏற்றுக்கொள்ள மாறுகிறதோ என்னமோ? இத்தகைய உண்மையை ஆய்வு செய்து அறியும் அளவுயிர்க்கு உயர்ந்து விட்டோமா? அல்லது இவ்வுண்மையை ஆய்வு செய்து தான் அறியும் அளவிற்கு மடிந்து விட்டோமா? விஞ்ஞானத்தை விரிவாக்கி விண்வெளி செல்லும் அளவிற்கு வளர்ந்து விட்ட வேட்டைக்காரனும் வில்வித்தைக்காரனும் வெறும் விளக்கற்ற, விளக்கமற்ற வேடிக்கைக்காரனாக மாறி விடுவானோ?
அனால், வேறுபாடுகள் மறந்த அந்த இடத்தில தான் கேள்வியும் மாறுகிறது. “நான் யார்?” என்பதிலிருந்து, “நாம் எங்கே இணைகிறோம்” என. அதன் பதில் கல்வெட்டிலோ காகிதத்திலோ அல்ல. நம் உடல்களிலேயே பாதிக்கப்பட்டுள்ளது. நம் மரபணுவின் ஒவ்வொரு பகுதியும் நாம் தேவைக்கு ஏற்ப, பல தலைமுறைகளாக நடந்த மாற்றங்களின் நினைவுச்சின்னம். நான்கு எழுத்துக்கள் மட்டுமே வைத்து வடிவமைக்கப்பட்ட இவ்வரலாற்றுப்பக்கங்களை கண்களாலோ கருவிகளாலோ கண்டறிய முடியாத காரணத்தினால், கணினிகளின் உதவியை நாடுகிறோம் - மரபணு எனும் நூலை நூலகமாய் மாற்ற. நாம் உருவாக்கிய கருவிகளை கொண்டு, நாம் எப்படி உருவாகினோம் என்ற மரபணுவில் மறைவாக மறைவடக்கம் செய்யப்பட்ட மர்மத்தை முடிச்சவிழும் முயற்சி தான் இது!
Transliteration:
Naam or payanam, ulagam or paadhai
Vidiyalin melliya velicham bhoomiyin meedhu vizhum bodhu, indha ulagathin adhisayam thannai thaane thirandhu kaattugiradhu. Aam, naam vaazhum indha ulagam prapanjathil suzhalum oru kal mattrum alla - adhan padarndhu virindha parappalavu palveru piraanigal payanam sellum or oivattra odai. Adhan aganra aagaayamum, aarkali ezhuppum aazhkadalum, adarndha aaranigalum, adangaadha aruvigalum, amaidhiyana malai medugalum, aayirakkanakkaana jeevaraasigalin vasippidam mattumalla, ivai anaithum oru amaidhiyaana adhisayathin aattam. Nutpamaana nunnuyirigal mudhal megathai minjum mirugangal varai, siragugal soozhndha sittu kuruvigal mudhal siraiyilladha singangal varai, polivaana pookal mudhal mallal marangal varai, minnal pol minnum meengal mudhal varnajaalame viyakkum vannathu poochigal varai, ovvoru uyiriyin thanithuvamaana thaalaththil thudikkum oru isai idhil edhirollikiradhu.
Indha perum oodalil, oru naal manidhan vidhaiyaai mulaithaan. Vandhaan, vendraan, sendraan, ena sollum alavirkku, avan kaigal karuvigalai amaiththana, avan sindhanai sorkkalai semmozhiyaaga sedhukkiyadhu. Neruppin nadiyai nodi neetti amaikka paarthaan, kadalin aazhathai alakka ninaiththan, malaiyin uyarathai thoda muyandraan, pagalai pirithu neram endru azhaithaan, kalaigalai katru karkalil kooda kottaigalai kattinaan, sooriyanin sakthiyai sunduviralil suvaikka paarththaan, minnalil minnum minsaarathai meiporulaga maattrinaan, idhayathile oru iyandhirathai iyakkinaan, idhayangalai inaikkum inayathai kondu vandhaan, vaanoli alaigalai veetin vaasalil konduvandhaan, anuvin sakthiyai arivinaal adakkinaan, nilavin mel nadakka thudithaan, avan sindhanaiyin siragugalaal sigarangalai adaindhaan. Avan paarvai munnokki sendradhu, avan paadhai pala idangalai serndhadhu.
Aanal andathin amaippai arivaatraludan purindhu konda avan oru kelviyai ketka marandhu vittaan: Pala uyirgal sangamitha indha nedunjchutril, avan idam enna? Indha inaippin idayil, avan uravu enna? Marandhuvittaana, alladhu maruththu vittaana? Sila samayangalil andha kelvigalai avan ketkavillai, pala samayangalil ketka virumbavillai.
Yenenil “Naan yaar? Engirundhu vandhen?” endra aabathaana kelviyin vidai avanai uyarthaadhu, thaazhthi mattume vidum. Thannai thaane buthisaaliyaana uyiri ena mudi sootti, naagarigam konda, iyarkaiyai vendra andha thalaikanam vaadividumo ennamo? Uyarndha uyiri ena pira uyirinangalai veliye vaithu thanakku mattume kattiya kottai orey nodiyil tharai mattam aagividumo ennavo? Aththudan uyirigalin varisaiyil irudhiyil vandhu ucha nilaiyai ettiyadhaaga enni thanakkena odhukkiya magudamum ariyaasanamum maraindhu vidumo ennamo? Naamum parinaama valarchiyin thodaril kadandha kaalathaiyum edhir kaalathaiyum inaikkum oru melliya kayittril nadanamaadum or thanithuvamattra uyirinam enum unmaiyai avan manam yetrukolla marukkiradho ennamo? Ithagaiya unmaiyai aaivu seidhu ariyum alavuirkku urarndhu vittoma? Alladhu ivvunmaiyai aaivu seidhu dhaan ariyum alavirkku madindhu vittoma? Vingyaanathai virivaaki vinveli sellum alavirkku valarndhu vitta vettaikaaranum vilvithaikaaranum verum vilakattra, vilakkamattra vedikkaikaaranaaga maari viduvaano?
Aanal, verupaadugal marandha andha idathil dhaan kelviyum maarugiradhu. “Naan yaar?” enbadhilirundhu, “Naam enge inaigirom” ena. Adhan badhil kalvettilo kaagidhathilo alla. Nam udalgalileye padhikkappattulladhu. Nam marabanuvin ovvoru pagudhiyum naam thevaikku yerpa, pala thalaimuraigalaaga nadandha maatrangalin ninaivuchinnam. Naangu ezhuthukkal mattume vaithu vadivamaikkapatta ivvaralaatruppakkangalai kangalaalo karuvigalaalo kandariya mudiyaadha kaaranathinaal, kaninigalin udhaviyai naadugirom - marabanu enum noolai noolagamaai maatra. Naam uruvaakiya karuvigalai kondu, naam eppadi uruvaaginom endra marabanuvil maraivaaga maraivadakkam seiyapatta marmathai mudichavizhum muyarchi dhaan idhu!
Translation:
We are a Journey, and the World is our Path
When the faint rays of dawn fall upon the Earth, the wonders of the world unveil themselves before us. Yes, the world that we inhabit is not a mere rock drifting through space - its widespread expanse is a restless stream upon which numerous creatures set their sail. Its vast skies, the roaring depths of the ocean, dense jungles, unruly waterfalls, serent valleys by the mountains are not just a home to thousands of organisms, they are a silent, ceaseless dance of wonders. From intricate microbes to mighty beasts that soar over the clouds, from sparrows clothed in soft feathers to untamable lions, from glowing flowers to lush trees, from fishes that glimmer like strokes of lightning to butterflies that could humble even the rainbows, the planet resonates with the rhythm, of every organism, that beats with its own pulse.
In this endless race of existence, man once sprouted like a seed. He came, he saw, he conquered, for his hands crafted tools, and his thoughts crafted languages. He wanted the fire to dance to his tunes, he thought of measuring the seas, he dared to scale the great mountains, he divided the day and called it time, he learnt arts, and raised fortresses of mere stones, he drew the power of the sun to his fingertips, he gave life to the electricity born off the lightning, with the pulse of his heart he commanded machines, he brought the internet to bring hearts together, he brought radio waves to every doorstep, he learnt to tame the power of an atom, he made reckless attempts to walk on the moon. And on the wings of his thoughts, he soared to unimaginable heights. His vision ever reached beyond the horizons, and that bore him to the farthest corners of the world.
Despite all this, he who through his intellect understood the structure of the cosmos, forgot to ask one question: In this sanctuary of species, where does he stand? Among these countless woven connections, where does he bond? Did he forget to ask this? Or did he choose not to? In some moments, he did not ask. In most others, he did not wish to.
Because, the question of “Who am I? Where did I come from?” is a perilous one. Its answer wouldn’t uplift him, but rather push him down. He crowned himself as the most intelligent species that has learnt to civilise itself and conquer nature itself - would that ego wither away? Will that fortress he built for himself claiming to be the superior species and leaving every other outside its walls, crumble onto the ground? Will that self proclaimed throne and the sceptre he held on to in the belief that he was the latest and loftiest in the great procession of life not dissolve into dust? Does his heart refuse to settle down at the realisation that that he is but another singular species spending its fleeting hour dancing upon a slender thread that binds the past to the present in the immeasurable design of things? Are we wise enough let our research reveal that every organism is bound in one living web? Or are we dumb enough to realise such a fundamental fact only through research? Will the archers and hunters, proud of having advanced so far to call themselves an extraterrestrial species, stand exposed as just another ordinary, meaningless creatures playing the part of jokers before the vast tribunal of time?
But in this phase where all differences are fade into oblivion, the question itself changes. It is no longer “Who am I”, it becomes “Where do we all converge?”. Its answers aren’t in inscriptions or on paper, it is embodied within ourselves. Every piece of our DNA is a memorial of generations of changes that we have accumulated as per our needs. Those pages of history written with just 4 letters aren’t visible to our eyes or tools. So, we turn to the computer, to turn the strands of our DNA into a library. This is an attempt to demystify the hidden secrets encoded in our DNA, and understand how we were created, using something which we ourselves have created.



This is so well written. You really weave science with threads of art. I want to read bigbang theory in your words👀🫶
This is sooo beautiful.....as someone who loveeddd the evolution chapter in 12th biology, i can explain how happy essays like these make me feellll!!! so good i really hope this becomes a series of essays<3